Header Ads

Header ADS

மனோசக்தியை எப்படி வளர்த்துக் கொள்வது?

எண்ண ஓட்டங்கள் குறைய குறைய மூளையின் செயல்திறன் அதிகரித்து கொண்டே போகும்!

Extra Sensory Perceptionஐ எல்லோராலும் வளர்த்து கொள்ள முடியும் ஆழ்ந்த தியானத்தால்!!

ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது!?

நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?!

ஆம் நாம் படுத்தபின் உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள்தான் அவை!!

அப்போது நாம் எதைப்பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்!!

தயவுசெய்து இனி படுத்தபிறகு அந்த நேரத்தில் பிரச்சனைகளை பற்றி யோசித்துவிடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகிவிடும்!!

உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்துவிட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.!!

அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்!!

ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?!

நாம் கற்பனை கூட செய்ய முடியாத அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது!!

சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது!
அதனால்; நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்!!!

வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே!!

ஆம் நாம், பூமி, இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும் நேரம் பிரம்ம முகூர்த்தமே பேரன்பா்களே!`

No comments

Powered by Blogger.